பொருட்கள்..
1. சுக்கு – 100 கிராம்
2. மிளகு – 100 கிராம்
3. திப்பிலி – 100 கிராம்
4. சீரகம் – 100 கிராம்
5. ஏலரிசி – 100 கிராம்
6. கொத்துமல்லி – 100 கிராம்
7. சீனாகற்கண்டு – 1 கிலோ
8. எலுமிச்சைப்பழம் – 20
9. இளநீர் – 3
10. பசுநெய் – ¼ கிலோ
11. தேன் – ½ கிலோ
முதலில் 1 முதல் 6 வரை சரக்குகளைத் தூள் செய்தும் ஒன்றாகக் கலந்துகொள்ளவும்.
இளநீரை ஒரு பாத்திரத்தில் இட்டு அடுப்பேற்றவும். பின்னர் பாத்திரத்தில் எலுமிச்சைப் பழ சாறு சேர்த்து, அத்துடன் கற்கண்டையும் சேர்த்து சிறு தீயாய் எரிக்கவும். பாகுபதம் வந்ததும் ஏற்கனவே தயார் செய்து வைத்துள்ள பொடியை சிறிது சிறுதாய் தூவிக் கிளறவும். பின்னர் தேன் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். லேகியம் நன்கு ஆறிய பின்பு நெய் உருக்கி கிளறி பத்திரப்படுத்தவும்.
இந்த லேகியத்தில் 1 ஸ்பூன் அளவு காலை மற்றும் இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டுவர பசியின்மை, பித்த மற்றும் வாய்வு நோய்கள், மயக்கம், ரத்தம் அழுத்தம், மார்பு வலி, காசநோய் ஆகியன தீரும். இது ஒரு கை கண்ட அனுபவ மருந்து.




