பித்தளைபாத்திரங்கள் பளபளக்க…
எவ்வளவு கடினமான கறையுள்ள பித்தளை சாமான்களையும் ரொம்ப சுலபமாக சுத்தம் செய்வதற்கு முதலில் உங்கள் சமையல் கட்டில் இருக்கும் கோதுமை மாவை எடுத்துக் கொள்ளுங்கள்.
ரெண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு கோதுமை மாவுடன் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு தூள் உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது இந்த மாவுடன், ஒரு முழு எலுமிச்சை பழத்தை பிழிந்து சாறு எடுத்து கெட்டியாக கரைத்து வைத்துக் கொள்ளுங்கள். தண்ணீர் எதுவும் சேர்க்க வேண்டாம். எலுமிச்சை சாறில் இருக்கும் தண்ணீரை இதற்கு போதுமானது.
இந்த மாவை கொண்டு நீங்கள் உங்களுடைய பூஜை சாமான்களை ஸ்க்ரப்பர் அல்லது கைகளாலேயே லேசாக தேய்த்து கொடுத்தால் போதும், மங்கிப் போன நிறம் மாறி புதுசு போல பளிச்சென மாறும். எல்லா பித்தளை சாமான்களையும் இது போல தேய்த்து கழுவி எடுத்துக் கொள்ளலாம். எலுமிச்சை சாறு சேர்ப்பதால் இரண்டு நாட்கள் ஆனாலும் பித்தளை பொருட்களில் கருப்பு புள்ளிகள் தோன்றாது.




