தொகுதி மறு சீரமைப்பு நடவடிக்கையால் ஜனநாயக உரிமை அரசியல் பிரதிநிதித்துவ உரிமை பாதிக்கப்படும் என பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தொகுதி மறு சீரமைப்புக்கு எதிராக நடந்த கூட்டுக் குழு கூட்டம் தேசிய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறிய முதல்வர் ஸ்டாலின், நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரிலேயே கூட்டு நடவடிக்கை குழு சார்பில் பிரதமரிடம் மனு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.




