அங்கன்வாடிகளில் இன்னும் ஒரு மாதத்திற்குள் 16,897 பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என சட்டப்பேரவையில் அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
மாநிலம் முழுவதும் உள்ள அங்கன்வாடிகளுக்கு 7,900 புதிய பணியாளர்கள் மற்றும் சத்துணவுக் கூடங்களுக்கு 8,997 சமையலர்கள் நியமனம் தொடர்பாக கடந்த வாரம் அரசாணை வெளியிடபட்டதை சட்டப்பேரவையில் அமைச்சர் கீதா ஜீவன் சுட்டிக்காட்டி உள்ளார்.




