பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசனைக் குழு தலைவர் பிபேக் டெப்ராய் காலமானார்..!!

பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதார ஆலோசகராக விளங்கிய  பிபேக் டெப்ராய்ட் இன்று காலை 7 மணி அளவில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார்.

இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி அவரது எக்ஸ்ப பதிவில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அந்தப் பதிவில் டாக்டர் பிபேக் டெப்ராய்ட் ஜி ஒரு உயர்ந்த அறிஞராக இருந்தார். பொருளாதாரம், வரலாறு, கலாச்சாரம், அரசியல், ஆன்மீகம் மற்றும் பல துறைகளில் நன்கு அறிந்தவர். அவரது படைப்புகள் மூலம் அவர் இந்தியாவின் அறிவு சார்ந்த நிலப்பரப்பில் ஒரு அழியாத முத்திரையாக பதித்தார். பொதுக் கொள்கையில் அவர் ஆற்றிய பங்களிப்புகளுக்கு அப்பால் நமது பழங்கால நூல்களை இளைஞர்களுக்கு அணுகக் கூடியதாக மாற்றுவதில் அவர் மகிழ்ந்தார் என பிரதம நரேந்திர மோடி பதிவிட்டுள்ளார்.

Read Previous

பட்டுப்புடவையை சுலபமான முறையில் எவ்வாறு பராமரிப்பது..!! பெண்களுக்கான டிப்ஸ் இதோ..!!

Read Next

பெண் பிள்ளை பெற்றவர்கள் என்றும் பாக்கியம் செய்தவர்கள் என்பதற்கு இந்த பதிவு ஒரு உதாரணம்..!! படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular