பிரபஞ்சத்திடம் கூறினால் நாம் நினைத்தது நடக்கும் என்று கூறுகிறார்களே அது உண்மையா..??

Oplus_131072

 

என் அனுபவத்தில் கூறுகிறேன். ஆறு ஆண்டுகளுக்கு முன் பிரபஞ்சத் திற்குமூன்று தகவல் அனுப்பினேன்…

காய்ந்த பிரிஞ்சி இலை மூன்றை எடுத்து கொண்டு, அதில் என் நீண்ட நாள் கோரிக்கையான முதலாவது,கல்யாணமாகி 7வருட ங்காளாக என் மகனுக்கு குழந்தை இல்லாமல்…குழந்தை வரம் வேண்டும்…இரண்டாவது,என் பேத்தி பிளஸ் 2இல் தமிழில் பாசாக வேண்டும் (தமிழில் படு வீக் )என்றும் மூன்றாவது என் மருமகன் வீண் செலவுகளை செய்யாது ஒழுங்காக இருக்க வேண்டும் என்றும் பேனாவில் எழுதி தீ குச்சியால் கொளுத்தி விட வேண்டும்…அந்த புகை மேல் நோக்கி பிரபஞ்சத் தை வாசனையுடன் அடைந்து விட்டது. இதில் தடங்கல் ஏற்பட கூடாமல் பார்த்து கொண்டேன்..

பிரபஞ்சத்திடம் ஒரு விதி உள்ளது…நியாய மாக நமக்கு விரும்பியது கிடைக்க வேண்டும் என்றால், அது கிடைத்தே தீரும் என்பதே அது…கொளுத்தி அனுப்பும் போது தடங்கல் ஏற்பட்டால்…அந்த கோரிக்கை கடைசி வரை நிறை வேறாது…சத்தியமானஅதிசயம்
என்னவென்றால் அந்த மூன்றும் எனக்கு இந்த வயதான காலத்தில் நிறைவேறியது…1.என்மகனுக்கு முதலில் பெண் குழந்தை, அடுத்து ஒரு ஆண் மகவு…2என் பேத்தி 67மார்க் பெற்று பாஸ். (இப்போது கல்லூரி யில் 2வது டிகிரி இறுதி ஆண்டு. 3.என் மருமகன் திருந்தி சென்னையில் ஒரு வீடு வாங்கும் அளவுக்கு முன்னேற்றம்..இப்போது என் 73வது வயதில் சுகமாக வாழுகின்றேன்…

எல்லாம் எனக்கு வழி காட்டிய ஒரு முனிவர் செயல்…இறைவன் கருணை…பிரபஞ்சத் தின்மகிமை…

இது போன்று நீங்கள் முயற்சிக்கலாம்…

கிடைக்க கூடிய விதி இருந்தால்…உண்மையான பக்தி இருந்தால்…எப்படியும் அது கிடைத்தே தீரும்…இறை வன், மனிதன் மீது வைத்த கருணை மகத் தானது…எழுதும் போது இறைவனை (நீங்கள் வணங்கும் எந்த தெய்வ மானாலும் சரி )நெஞ்சுருக வேண்ட வேண்டும்…. கொடுப்பினை இருப்பவர்களுக்கு தான் என் இந்த சிறு கட்டுரை கண்ணுக்கு தெரியும்… எல்லோரும் நலம் பெறட்டும்.. வாழ்க வையகம்,

Read Previous

பித்த நோய்கள் பலவற்றையும் போக்கும் சீரகம்..!!

Read Next

பூவரசு இலையின் மருத்துவ குணங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular