திருவாரூர் மாவட்டம் கூடூர் நாரணமங்கலம் பகுதியை சேர்ந்தவர்கள் மணிகண்டன்-சவுந்தர்யா தம்பதி. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததால், சவுந்தர்யா தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் மனமுடைந்த மணிகண்டன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்நிலையில், அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி மணிகண்டன் உயிரிழந்துள்ளார்.




