விளக்கேற்றும்போது நீங்கள் கட்டாயம் கவனிக்க வேண்டியவை..!! கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்..!!

விளக்கேற்றும்போது தீபத்தில் உள்ள எண்ணெய்தான் எரிய வேண்டுமே தவிர, திரி அல்ல. திரி எரிந்து கருகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

 

விளக்கை ஏற்றும்போது, வீட்டில் பின் வாசல் இருந்தால் அதன் கதவைச் சாத்திவிட வேண்டும். எந்தக் காரணத்தை முன்னிட்டும் எவர்சில்வர் விளக்கைப் பயன்படுத்தக்கூடாது.

 

வீட்டில் ஒருவர் உறங்கிக்கொண்டு இருக்கும்போது விளக்கு ஏற்றக்கூடாது.

 

காலையில் 5 முதல் 6 மணிக்குள்ளும் மாலை 5:30 முதல் 6 மணிக்குள்ளும் தீபம் ஏற்றி வழிபட்டால், சகல வளங்களும் உண்டாகும்.

 

விளக்கில் ஒரு முகம் ஏற்றினால் மத்திமப் பலன் கிடைக்கும்.

 

இரண்டு முகங்கள் ஏற்றினால் ஒற்றுமை உண்டாகும்.

 

மூன்று முகங்கள் ஏற்றினால் புத்திர பாக்கியம் ஏற்படும்.

 

நான்கு முகங்கள் ஏற்றினால் கால்நடை செல்வங்கள் பெருகும்.

 

ஐந்து முகங்கள் ஏற்றினால் அஷ்ட ஐஸ்வர்யங்களும் உண்டாகும்.

 

தீய சக்திகளை விரட்டும் மஞ்சள் குங்குமம்!

 

வீட்டின் நிலைகளில் மஞ்சள்-குங்குமம் வைப்பதால் துஷ்ட சக்திகள் நெருங்காது; விஷக்கிருமிகளிடம் இருந்தும் பாதுகாப்பு கிடைக்கும். அதேபோல், பெண்கள் நெற்றியில் புருவ மத்தியிலும், வகிட்டிலும் வைத்துக்கொள்ளும் குங்குமம், வசிய சக்திகளிடம் இருந்து அவர்களைக் காக்கும்; அந்தப் பெண்ணுக்குச் சர்வ மங்கலங்களையும் அருளும்.

Read Previous

ஒவ்வொரு பொருளிலும் பிள்ளையார் பிடிப்பதால் ஒவ்வொரு விதமான பலன்கள் உள்ளது..!!

Read Next

பிரிந்து சென்ற மனைவி.. கணவர் எடுத்த விபரீத முடிவு..!! போலீஸ் விசாரணை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular