சென்னை பெருங்குடியில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட குடும்பத் தகராறில், தாயைக் கொலை செய்ததாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையின்படி, சமீபத்தில் வெளியான பிளஸ்-2 தேர்வு முடிவில் தோல்வியடைந்த மாணவனிடம், அவரது தாய் படிப்பு மற்றும் எதிர்காலம் குறித்து தொடர்ந்து அறிவுரை கூறியதாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நள்ளிரவு நேரத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தாயை, அந்த இளைஞர் கத்தியால் குத்தியும் கல்லால் தாக்கியும் கொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து இளைஞரை கைது செய்தனர். மேலும், அவர் கடந்த சில மாதங்களாக மனநல சிகிச்சை பெற்று வந்ததாகக் கூறப்படும் நிலையில், சம்பவத்தின் பின்னணி மற்றும் உடல்நல நிலை உள்ளிட்ட அனைத்து கோணங்களிலும் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




