முதல்வர் விஜய்யை விமர்சித்ததாகக் கூறப்படும் வழக்கில் விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசியல் கருத்துகளை வெளிப்படுத்தியதற்காக எதிர்க்கட்சியினரை கைது செய்வது ஜனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கை என அவர் விமர்சித்துள்ளார்.
மேலும், “ஆட்சியாளர்களின் சட்டத்துக்குப் புறம்பான உத்தரவுகளை நிறைவேற்றி அவர்களை திருப்திப்படுத்துவது காவல்துறையின் பணி அல்ல. காவல்துறையினர் சட்டப்படியும் மனசாட்சிப்படியும் செயல்பட வேண்டும்” என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
தொடர்ந்து, சட்டத்தின் ஆட்சியை பின்பற்றத் தவறி அரசியல் அழுத்தங்களுக்கு இணங்கி செயல்பட்டால், “There will be consequences” (அதற்கான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்) என்றும் காவல்துறையினருக்கு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




