Oplus_131072
புதுசா கல்யாணம் ஆன கணவன் மனைவி இடையே ஒரு ஒப்பந்தம்”…..!!
இன்று ஒரு நாள் மட்டும்…., “யார் வந்தாலும் கதவை திறக்க கூடாது என்று முடிவெடுத்தனர்”……!!
அன்றே..,
” கணவனுடைய அம்மா அப்பா வந்தனர் “…..!!
இருவரும் அவர்கள் வருவதை…,
“ஜன்னல் வழியாக பார்த்துவிட்டனர்”……!!
இருவரும் ஓருவரை ஓருவர் பார்த்து கொண்டனர்…..!!
“கணவனுக்கு கதவை திறக்க வேண்டும் என்ற ஆசை”……!!
ஆனால் ,
“ஒப்பந்தம் போட்டு விட்டதால்”….,
“அதை மீற மனமின்றி கதவை திறக்க வில்லை அவன்”…….!!
அவர்கள் வீட்டில் யாரும் இல்லை என்று நினைத்து…..,
” திரும்பி போய் விட்டனர்”……!!
கொஞ்ச நேரம் கழித்து….. ,
“மனைவியின் அம்மா அப்பா வந்தனர்”…..!!
கதவை தட்டினார்கள்….!!
” இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்”…..!!
ஆனால்,
” மனைவிக்கு கண்கள் கண்ணீரால் குளமானது”…….!!
” என்னால் கதவை திறக்காமல் இருக்கமுடியாது ” …..,
என்று சொல்லி கதவை திறந்தாள்.
ஆனால் ,
“கணவன் ஒன்றும் சொல்ல வில்லை”……!!
வருஷங்கள் உருண்டோடின….!
“இரண்டு ஆண் குழந்தை பிறந்தது”….!!
மூன்றாவதாக….,
“பெண் குழந்தை பிறந்தது”……!!
கணவன்…,
” பெண் குழந்தை பிறந்த சந்தோஷத்தில்”…… ,
பெரிய அளவில் செலவு செய்து…..,
” அனைவருக்கும் பார்ட்டி கொடுத்து கொண்டாடினான்”…….!!
அதற்கு மனைவி ,
“இரண்டு ஆண் குழந்தை பிறந்த போது”……,
” இவ்வளவு பெரிய அளவில் கொண்டாட வில்லை”…….!!
” பெண் குழந்தை பிறந்தவுடன்”….,
” இவ்வளவு பெரிய பார்ட்டி கொடுக்கிறீங்களே ஏன்”……?
என்று கேட்டாள் …..!!
அதற்கு கணவன்….,
” ரொம்ப நிதானமாக சொன்னான்”.
எதிர்காலத்தில்…..,
” எனக்காக கதவை திறக்க”.
” ஓரு பெண் பிறந்துவிட்டாள் “!!
என்றான் கர்வத்துடன்….!!!
பெண்களை பெற்ற அனைவருக்கும் சமர்ப்பணம்..




