நம்முடைய முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்தே வீடுகளில் ஒரு சில விலங்குகளை வளர்க்கும் பழக்கத்தை வைத்திருந்தனர். அந்த வகையில் ஒரு சிலர் வீடுகளில் நாய் பூனை, மாடு ,ஆடு, போன்றவர்களை வீட்டில் வளர்த்தனர். இந்த காலகட்டத்திலும் கிராமப்புறங்களிலும் சரி ஒரு சில நகர்ப்புறங்களிலும் சரி இதை எல்லாம் வளர்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஒரு சிலர் வீட்டில் நாயை வளர்க்கிறார்கள். ஒரு சிலர் வீட்டில் பூனையை வளர்க்கிறார்கள். ஒரு சில மனிதர்கள் வீட்டில் நாயை வளர்ப்பதால் அந்த நாயுடன் பரஸ்பர அன்பையும் தனித்துவமான உறவையும் அதனுடன் உருவாக்குகிறார்கள். அதேபோலத்தான் பூனைக்கும். ஆனால் வாஸ்து சாஸ்திரத்தின் படி ஒரு சிலர் பூனையை வீட்டில் வளர்க்கக்கூடாது அதுவும் குறிப்பாக இந்த ராசிக்காரர்கள் எல்லாம் வீட்டில் பூனையை ஒருபோதும் வளர்க்கக்கூடாது. அது எந்தெந்த ராசிக்காரர்கள் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
வாஸ்து சாஸ்திரத்தின் படி மற்றும் ஜோதிட சாஸ்திரத்தின்படியும் நாம் எந்தெந்த விலங்களை வீட்டில் வைத்திருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வது மிகவும் அவசியமான ஒன்று. ஏனென்றால் வாஸ்து சாஸ்திரப்படி ரீதியாக ஆரோக்கிய ரீதியாகவும் சரி, ஒரு சில விலங்குகளை எல்லாம் நாம் வீட்டில் வளர்க்கக்கூடாது இவ்வாறு வளர்த்தால் நம் ஆரோக்கியத்தில் மிகப்பெரிய விளைவை ஏற்படுத்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன்படி மேஷ ராசிக்காரர்கள் பூனைகளை ஒருபோதும் வீட்டில் வளர்க்கக்கூடாது. ஏனென்றால் ஜோதிட சாஸ்திரத்தின் படி இவர்கள் பூனைகளை வளர்த்தால் மன அழுத்தம் மற்றும் தேவையில்லாத உடல் நலக் குறைவிற்கு ஆளவார்கள் என்று கூறப்படுகிறது. கன்னி ராசிக்காரர்களும் பூனைகளை ஒருபோதும் வீட்டில் வளர்க்க கூடாது. இது அவர்களுக்கு பண சிக்கலையும், மன உளைச்சலையும் ஏற்படுத்துவதோடு ஆரோக்கியத்தில் மிகப்பெரிய கேடு விளைவிக்கும். அதனால் ஒருபோதும் கன்னி ராசிக்காரர்கள் பூனையை தனது வீட்டில் வளர்த்து விடாதீர்கள். மிதுன ராசிக்காரர்களும் ஒருபோதும் வீட்டில் பூனையை வளர்த்து விடாதீர்கள் அப்படி வளர்த்தால் மனநல பிரச்சனைக்கு நீங்கள் ஆளாவீர்கள். எனவே வாஸ்து சாஸ்திரத்தின் படிவம் ஜோதிட சாஸ்திரத்தின் படியும் எந்தெந்த விலங்குகளை வீட்டில் வைத்திருப்பது நல்லது என்பதை தெரிந்து அதை மூலம் நன்மை அடையலாம்.




