குறிப்பாகவே பெண்கள் அனைவரும் தன் முகத்தை பளபளப்பாகவும் பொலிவுடன் வைத்துக்கொள்ள வேண்டும் என்று அனைவரும் விரும்புகின்றனர். ஆனால் சுற்றுச்சூழல் பிரச்சனை காரணமாகவும், மற்றும் உணவு முறை காரணமாகவும் சரியாக தண்ணீர் அருந்தாத காரணமாகவும் பல பெண்களுக்கு முகத்தில் சுருக்கம் கொப்பளம் போன்றவைகள் ஏற்படுகின்றன. மேலும் பெண்கள் முள்ளங்கியை பயன்படுத்தினால் முகத்தை பளபளப்பாக வைத்துக் கொள்ள முடியும் என்று சொன்னால் நம்புவீர்களா? ஆம் அதைப்பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
உங்கள் முகம் புத்துணர்ச்சியுடனும், பளபளப்பாகவும், அழகாகவும் மாற்றுவதற்கு நீங்கள் முள்ளங்கியை பயன்படுத்தலாம். இது முகத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. முள்ளங்கி முகத்திற்கு பயன்படுத்துவதா? என்று அனைவரும் குழம்புவீர்கள். முள்ளங்கியை சமைக்க தானே பயன்படுத்துவார்கள் என்றும் நினைப்பீர்கள். ஆனால் இதை முகத்திற்கு பயன்படுத்தலாம். முள்ளங்கியில் உள்ள வைட்டமின் கே,ஈ,ஏ,சி போன்ற ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்சிஜன் போன்றவை ஆரோக்கியமான சருமத்திற்கு மிகவும் உதவுகிறது. முள்ளங்கி பேஸ் பேக் எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம்.
துருவிய முள்ளங்கி உடன் சிறிதளவு தயிரை நன்றாக கலந்து முகம் மற்றும் கழுத்தில் நன்றாக தடவி அதை பதினைந்து நிமிடம் ஊற வைத்து பின்னர் குளிர்ந்த தண்ணீரில் நன்றாக கழுவ வேண்டும். இவ்வாறு பயன்படுத்தினால் நம் சருமம் இயற்கையாகவே பளபளப்பாக இருக்கும்.




