பெண்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய ஆரோக்கிய குறிப்புகள்..!!

பெண்களுக்கான மருத்துவ குறிப்புகள்
திராட்சை சாற்றை முகத்திலும் கழுத்திலும் தடவி 20 நிமிடங்களுக்கு பிறகு முகத்தை கழுவினால் சருமம் ஈரப் பதத்துடன் காணப்படும். இதனை தினமும் செய்து வந்தால் சரும வரட்சியை தடுக்கலாம்.
பாதாம் பருப்பில் உள்ள சத்துக்கள் குழந்தை பிறப்பதில் ஏற்படும் குறைபாட்டினை நீக்கும். தவிர பெண்களின் லிபிடோ சக்தியை ஊக்குவிக்கிறது. சோயா பீன்ஸ்சில் உள்ள சத்துக்கள் பெண்களீன் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பை அதிகரிக்கிறது.
சோயாபீன்ஸ் உயர்தர புரதம் அடங்கியது. இது மெனோபாஸ் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் மனஅழுத்தம் போன்றவைகளை குறைக்கிறது.
தாய்பால் சுரக்காத பெண்கள் வீட்டிலேயே எளிதான மருத்துவ முறைகளை மேற்கொள்ளலாம். அதிமதுரம் பொடியை சிறிதளவு சர்க்கரை கலந்து 2 முறை பாலுடன் குடித்து வந்தால் தாய்பால் பெருகும்.

குழந்தை பெற்ற பெண்களுக்கு வெள்ளை பூண்டை நல்லெண்ணெயில் வதக்கி அதனுடன் கருப்பட்டியுடன் கலந்து சாப்பிட கொடுத்தால் தாய்பால் அதிகம் சுரக்கும்.
பச்சை பயிறு மாவுடன், தேன் மற்றும் பன்னீர் சேர்த்து கலந்து முகத்தில் போட்டு, அரை மணி நேரம் வைத்து கழுவினால் முகம் பளிச்சிடும்.
பெண்களின் வயிற்று சதை குறைய: சின்ன வெங்காயத்தை பசுநெய்யில் வதக்கி நன்கு மெழுகு போல் அரைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை என தினமும் இருவேளை ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் அடிவயிறு சதை குறைந்து உடல் அழகாகும்.மார்பகங்கள் எடுப்பான தோற்றம் பெற அமுக்காரா, அதிமதுரம், முல்தானி மட்டி மூன்றையும் சம அளவில் எடுத்து அரைத்துக் கொள்ளவும். பின்பு பருப்பு வேகவைத்த தண்ணீரில் இந்தக் கலவையை குழைத்து பற்று போட்ட வேண்டும்.

காதில் கம்மல் போடும் இடத்தில் புண் இருந்தால் கடுக்காய், மஞ்சள் அரைத்து பூசி வர விரைவில் புண் ஆறி விடும்தயிரை தலைக்குத் தேய்த்து ஊறிய பின் சீயக்காய் தூள் போட்டுக் குளித்தால் முடி உதிர்வது நிற்கும்..
பப்பாளிக்காயைக் கூட்டு செய்து சாப்பிட்டால் பால் கொடுக்கும் தாய்மார்களுக்குப் பால் அதிகமாக சுரக்கும்.
இரவில் செம்பருத்திப் பூக்களைத் தலையில் வைத்துக் கொண்டு படுத்து காலையில் எடுப்பதால் மூளைக்கும் கண்களுக்கும் குளிர்ச்சி உண்டாகும்.பேன் பொடுகு அகலும்..
மஞ்சளையும் வேப்பிலையையும் அரைத்துப் பூசி வந்தால் கரப்பான் புண்கள் விரைவில் ஆறி விடும்.

Read Previous

BEL-ல் வேலைவாய்ப்பு..!! 40 காலிப்பணியிடங்கள்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Read Next

RailTel Corporation of India Limited (RailTel)-யில் காத்திருக்கும் அருமையான வேலைவாய்ப்பு..!! ரூ.1,40,000/- வரை மாத ஊதியம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular