சென்னை பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை பகுதியில் வசித்து வரும் இளம்பெண் வீட்டிற்குள் இளைஞன் ஒருவன் அத்துமீறி நுழைந்துள்ளான். அந்த பெண்ணை குத்தி கொலை செய்து விடுவேன் என மிரட்டி கட்டி போட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். மேலும், அதை வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டி வீட்டில் இருந்த நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளான். இதையடுத்து நடந்த விசாரணையில், குற்றவாளியான அஜய் குமாரை போலீசார் கைது செய்தனர்.




