பெருந்துறை அருகே நான்கு மாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது..
பெருந்துறையை அடுத்து விஜயமங்கலம் கள்ளியும்புதூரை சுப்பிரமணி என்பவரின் மகள் கோமதி வயது 33 இவர் குமாரபாளையம் ரத்தினத்தின் மகன் கோபாலை 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் 12 வயதில் கோகுல் என்ற மகனும் உள்ளார், மேலும் நான்கு மாத கர்ப்பிணியாக இவர் இருக்கிறார், தற்போது பெருந்துறை ஐயப்பன் நகரில் கோமதியும் கோபாலும் இருந்து வருகின்றனர் கடந்த செப்டம்பர் எட்டாம் தேதி கணவன் மனைவிக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது தகராறு சண்டையாக மாறியதில் மனம் உடைந்த கோமதி வீட்டிற்குள் சென்று கதவை பூட்டி கொண்டார், மின்விசையில் சேலையை மாட்டி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் கோமதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் கோமதியின் கணவரிடம் போலீஸார்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..!!




