பெரும் சோகம் அதிகமான உடற்பயிற்சியால் ஜிம் உரிமையாளர் மயங்கி உயிரிழப்பு..!!

சேலம் கோட்டை பகுதியில் வசித்து வருபவர் 35 வயது மகாதிர் மகமுத், 31 வது வார்டு திமுக முன்னாள் செயலாளர் குகை ஆற்றோர வடக்கு தெருவில் சொந்தமாக ஜிம் வைத்து நடத்தி வருகிறார்…

இவர் தினமும் அவருடைய ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்வது வழக்கமாக இருந்து வருகிறது நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு அவர் ஜிம்மில் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார், இரவு 8 மணிக்கு ஜிம்முக்கு வந்த அனைவரையும் உடற்பயிற்சி முடித்துக் கொண்டு சென்றுவிட்டனர், இவர் மட்டும் தொடர்ந்து உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர், பின்னர் ஜிம்மில் உள்ள குளியல் அறையில் குளித்தார் நீண்ட நேரம் ஆகியும் அவர் வெளியே வராததால் அவரது ஓட்டுநர் குளியலறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மூக்கு மற்றும் காதில் ரத்தம் வடிந்த நிலையில் மூச்சு பேச்சி இல்லாமல் கிடந்தார், உடனே டிரைவர் முஸ்தபா மற்றும் அங்கிருந்தவர்கள் அவரை தூக்கி கொண்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்து உயிர் இழந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர், இது குறித்த தகவல் அறிந்த போலீசார் ஜிம்மிற்கு சென்று பார்வையிட்டுள்ளனர் அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை பார்வையிட்டு ஆய்வு நடத்தினர் இது குறித்து போலீசார் நடத்தி விசாரணையில் அளவுக்கு அதிகமான உடற்பயிற்சியில் ஈடுபட்டு வெந்நீரில் குளித்து உள்ளார். இதனால் மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்து அவர் விழுந்து உயிரிழந்திருக்கலாம் இச்சம்பம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்…!!

Read Previous

தெலுங்கிற்கு பாகுபலி போல தமிழ் சினிமாவுக்கு கங்குவா இயக்குனர் சுசீந்திரன்..!!

Read Next

குளிர்காலத்தில் வெந்நீர் இதமாக இருக்கும் ஆனால் ரொம்ப டேஞ்சர் : யார் குடிக்கக்கூடாது தெரியுமா..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular