பேரீச்சம்பழம் எப்போது காலாவதி ஆகும்..?? அதை சாப்பிடுவதால் என்ன ஆபத்து..!!

Oplus_131072

பேரீச்சம்பழம் எப்போது காலாவதி ஆகும்? அதை சாப்பிடுவதால் என்ன ஆபத்து..!!

1. பேரீச்சம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டது எப்படி?

2. பேரீச்சம்பழத்தின் காலாவதி தேதி நிர்ணயிக்கப்படுவது எப்படி?

3. காலாவதி தேதியை கடந்த பேரீச்சம்பழத்தை அழிப்பது ஏன்?

4. எந்தெந்த நாடுகளில் இருந்து பேரீச்சம்பழம் இறக்குமதி செய்யப்படுகிறது?

5. எத்தனை வகையான பேரீச்சம்பழங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன?

6. பேரீச்சம்பழத்தை எவ்வளவு காலத்திற்கு பதப்படுத்தி வைக்கலாம்?

7. பேரீச்சம்பழத்தை காலாவதியான பிறகு சாப்பிட்டால் என்ன ஆகும்?

பேரீச்சம்பழங்கள் குறித்து ஒருவித அச்சம் கலந்த கருத்துகள் மக்களிடையே பரவத் தொடங்கியுள்ளன. உண்மையில், பேரீச்சம்பழங்கள் எங்கிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன? காலாவதியான பேரீச்சம்பழங்களை எப்படி கண்டுபிடிப்பது?

பேரீச்சம்பழத்தின் காலாவதி தேதி நிர்ணயிக்கப்படுவது எப்படி?

பேரீச்சம்பழம் உலர் பழம் (Dry Fruits) என்பதால், அவற்றை இறக்குமதி செய்யும் காலத்தில் இருந்து ஓர் ஆண்டு வரையிலான காலகட்டத்தைக் கணித்து அதற்கேற்ப பாக்கெட்டுகளில் பேக்கிங் தேதியையும், காலாவதி தேதியையும் குறிப்பிடுகிறார்கள்.
அதற்கும் மேற்பட்ட காலத்திற்கு இருந்தால் இயற்கையாகவே அது கெட்டுப் போய்விடும். புழுக்கள், வண்டுகள் மற்றும் பூச்சிகள் உருவாகிவிடும். அதைச் சாப்பிடும் நபர்களுக்குப் பலவிதமான பாதிப்புகள் ஏற்படும்’

காலாவதி தேதியை கடந்த பேரீச்சம்பழத்தை அழிப்பது ஏன்?

காலாவதி தேதி முடிந்த பேரீச்சம்பழங்களை இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணைய விதிகளின்படி உடனே அழிப்பதுதான் முறை அவற்றுக்கு பேக்கிங் செய்த நிறுவனமே, ஒரு காலாவதி தேதியை நிர்ணயித்துவிட்டது. அது முடிந்துவிட்டால் விதிகளின்படி உடனே அழிக்க வேண்டும்

இயற்கையாக விளைந்த அல்லது பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் காலாவதி தேதி முடிந்துவிட்டால், “அவற்றைத் தனியாக வைக்க வேண்டும், அவற்றின் மீது ‘விற்பனைக்கு அல்ல’ என்று ஸ்டிக்கர் ஒட்டி வைக்க வேண்டும்”

எந்தெந்த நாடுகளில் இருந்து பேரீச்சம்பழம் இறக்குமதி செய்யப்படுகிறது?

உலக வங்கியின் உலக ஒருங்கிணைந்த வர்த்தக தீர்வுஅளித்துள்ள 2023ஆம் ஆண்டு தரவுகளின்படி, இந்தியா ஆண்டுக்கு 2 லட்சத்து 67,176 அமெரிக்க டாலர் மதிப்பிலான 49 கோடியே 5 லட்சத்து 89 ஆயிரம் கிலோ அளவிலான பேரீச்சம்பழங்களை உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்கிறது. உலகிலேயே பேரீச்சம்பழத்தை அதிகளவில் இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா உள்ளது.
இதில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் இருந்து மட்டும் 45 சதவிகித அளவுக்கு ஆண்டுக்கு 120 மில்லியன் டாலர் மதிப்பிலான பேரீச்சம்பழங்களை இந்தியா இறக்குமதி செய்கிறது.
அடுத்ததாக இராக்கில் இருந்து 30 சதவிகிதம் அளவில் 81 மில்லியன் டாலர் மதிப்பிலும், இரானில் இருந்து 14 சதவிகிதம் அளவில் 37 மில்லியன் டாலர் மதிப்பிலும் பேரீச்சம்பழம் இறக்குமதி செய்யப்படுகிறது.
இவைபோக செளதி அரேபியாவில் இருந்து ஆண்டுக்கு 10 மில்லியன் டாலர் மதிப்பிலும், ஓமன், இஸ்ரேல், பஹ்ரைன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து சிறிய அளவிலும் பேரீச்சம்பழத்தை இந்திய வணிகர்கள் இறக்குமதி செய்து, தரம் பிரித்து நிறுவனங்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

எத்தனை வகையான பேரீச்சம்பழங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன?

இனிப்பு, உலர், ஈரம் ஆகிய தன்மைகளின் அடிப்படையில் பேரீச்சம்பழங்கள் வெவ்வேறு வகையாகப் பிரிக்கப்படுகின்றன.
உலகிலேயே பெரியதும், மிகவும் இனிப்பானதுமான மெஜூல் (Medjool) என்ற பேரிச்சம்பழம்தான், உலகளவில் உயர்தர வகையாகக் கருதப்படுகிறது. இதுவும் இந்தியாவில் கணிசமாக இறக்குமதி செய்யப்படுகிறது.
இவைபோக, அரேபியாவில் அதிகமாக விளைவிக்கப்படும் சக்ரி (Sukkari), இரானில் விளையும் மஜஃபாதி (Mazafati) ஆகியவற்றுடன், ஜஹிதி (Zahidi), டெக்லெட் நூர் (Deglet Noor), செய்யர் (Sayer), ஹலாவி (Halawi), பியாரம் (Piarom), ஷம்ரான் (Shamran), தையிரி (Dayri) எனப் பலவிதமான பேரீச்சம்பழங்கள் இறக்குமதி செய்யப்பட்டு, இந்திய சந்தைகளுக்குப் பிரித்து அனுப்பப்படுகின்றன.
அதுமட்டுமின்றி, பார்ஹி (Barhi), மெஜூல் (ராஜஸ்தானில் மட்டும்), ஜஹிதி ஆகிய வகை பேரீச்சம்பழங்கள், தமிழ்நாடு, குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், கேரளா ஆகிய மாநிலங்களில் வளர்க்கப்படுகின்றன.

பேரீச்சம்பழத்தை எவ்வளவு காலத்திற்கு பதப்படுத்தி வைக்கலாம்?

பேரீச்சம்பழங்களை எவ்வளவு காலம் பாதுகாப்பாக வைக்க முடியும் அல்லது எவ்வளவு காலம் பதப்படுத்தி வைத்து உண்ணலாம் என்பது குறித்து உலக சுகாதார நிறுவனம் எந்தக் குறிப்புகளையும் வழங்கவில்லை.
ஆனால், பொதுவாக பேரீச்சம்பழத்தின் தன்மை மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளின் அடிப்படையில், 6 மாதங்களில் இருந்து அதிகபட்சமாக ஒரு வருடம் வரை பாதுகாத்து வைத்துப் பயன்படுத்தலாம்

பேரீச்சம்பழத்தை காலாவதியான பிறகு சாப்பிட்டால் என்ன ஆகும்?

பேரீச்சம்பழத்தில் வைட்டமின் பி6, பொட்டாஷியம், மெக்னீஷியம், நார்ச்சத்து, சர்க்கரை என உடலுக்குத் தேவையான, ஆரோக்கியம் தரும் அம்சங்கள் உள்ளன.
ஆனால், காலாவதியாகி கெட்டுவிட்டால், அது விளைவிக்கும் பாதிப்புகளும் அதிகம். அதிலும், பேரீச்சம்பழம் கெட்டுவிட்டாலும் அது எளிதில் கண்ணுக்குத் தெரியாது என்பதுதான் இதிலுள்ள முக்கியமான சிக்கல்
தமிழ்நாட்டில் பெரும்பாலும் வெப்பம் அதிகமுள்ள நிலையில்தான் அவை வைக்கப்படுகின்றன. கோவை போல மிதவெப்பமும், ஈரப்பதமும் உள்ள பகுதிகளில் பேரீச்சம்பழம் போன்ற எந்த வகை இயற்கை உணவிலும் பூஞ்சைகள் உருவாகிவிடும்.
அதில், மைக்கோடாக்சின்கள் (Mycotoxins) கலந்து புற்றுநோய்க்கு ஒரு காரணமாக இருக்கும் அஃப்லாடாக்சின் (aflatoxin) உற்பத்தியாகி, கல்லீரலுக்கு நேரடி பாதிப்பை ஏற்படுத்தும். பருவமழைக் காலத்தில் இந்த பூஞ்சை உருவாக வாய்ப்பு அதிகம்

பேரீச்சம்பழத்தில் சர்க்கரை அதிகளவில் இருப்பதால், நாளடைவில் நொதித்தலுக்கு உள்ளாகி (fermentation) அதில் அதிக புளிப்புச் சுவை ஏற்படும் என்று குறிப்பிட்ட மருத்துவர் ஹரிணிவாஷினி முருகேசன், அதைச் சாப்பிடும்போது ஒருவித மந்தநிலை ஏற்பட வாய்ப்புள்ளது அதோடு, பூஞ்சை அதிகமாகவுள்ள பேரீச்சம்பழத்தை சாப்பிடும் சிலருக்கு வாந்தி, தலை சுற்றல் ஏற்படவும் வாய்ப்பு வெகுநாளாகிவிட்ட பேரீச்சம்பழங்களில் பாக்டீரியா பாதிப்பு இருக்கும். அவை கண்ணுக்குத் தெரியாது. நுண்ணோக்கியில் மட்டுமே அதைக் கண்டறிய முடியும். அந்த பாக்டீரியா அருகிலுள்ள மற்ற உணவுப் பொருட்களையும் பாதிக்கும்.”
எனவே, கெட்டுப்போன பேரீச்சம்பழங்களை தனியாக வைக்க வேண்டும் அல்லது அழித்துவிட வேண்டும்

மேலும், “சில பேரீச்சம்பழங்களில் அடர் கருப்பு நிறம் வருவதற்காகவும், கெடாமல் இருக்கவம் சல்ஃபைட் சேர்ப்பதாக சில ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. அந்த சல்ஃபைட் உடையும்போது ஆஸ்துமா, அலர்ஜி போன்றவற்றை ஏற்படுத்தலாம் எந்த வகை பேரீச்சம்பழமாக இருந்தாலும் நாளாகிவிட்டால், வண்டு, புழு போன்ற பூச்சிகள் உருவாகும் என்பதால் கவனத்துடன் சாப்பிட வேண்டுமென அறிவுறுத்தும் ஹரிணிவாஷிணி, “அவை எப்படி விளைவிக்கப்பட்டு, தயாரிக்கப்பட்டன என்பதைக் குறிப்பிடும் வகையில் லேபிள்களில் சில குறிப்புகள் (organic, unsulfured, preservative-free) இருப்பதையும் கவனித்து வாங்குவது மிகவும் நல்லது.

Read Previous

26 விதமான நோய்களுக்கும் ஒரே மருந்தாக தீர்வளிக்கும் வல்ல‍மை கொண்ட ஓர் அதிசய மூலிகை இதுதான்..!!

Read Next

வாய் துர்நாற்றத்தை தவிர்ப்பது எப்படி..?? தினசரி எத்தனை முறை, எவ்வளவு நேரம் பல் துலக்க வேண்டும்..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular