அனைவரின் வாழ்விலும் ஒரு முக்கிய பங்கு வகிப்பது நம்முடைய 12ஆம் வகுப்பு தேர்வு மதிப்பெண்கள் தான். இந்த ஆண்டு தமிழ் நாட்டில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 3 தேதி ஆரம்பித்து மார்ச் 25வுடன் முடிவடைந்தது. இதில் 8.21 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர். மேலும் இந்த தேர்வு 3,316 மையங்களில் நடைபெற்றது. இந்நிலையில், இதன் தேர்வு முடிவுகள் குறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அந்த தகவலில், வரும் ஏப்ரல் 4ம் தேதி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கவுள்ளதாகவும் ஏப்ரல் 17ம் தேதி வரை அது நடைபெறவுள்ளதாகவும் தேர்வுகள் இயக்குனரகம் தெரிவித்துள்ளது. எனவே, இப்பணிகள் முடிந்த சில தினங்களில், அதாவது மே 9 ம் தேதி 12 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என மக்களால் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இதுக்குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை அரசு விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




