பொய்க்கும் உண்மைக்கும் என்ன வித்தியாசம்..??

Oplus_131072

பொய்க்கும் உண்மைக்கும் என்ன வித்தியாசம் ??

பொய் என்பது எண்ணத்தின் சிதறல்களின் வெளிப்பாடே !! அது ஓர் விஷயத்தை எவ்வாறு எல்லாம் மறைத்தால் அது பொய் ஆகும் என்று பல்வேறு எண்ணத்தில் சிந்தித்து அதன் தாக்கம் எப்படியெல்லாம் இருக்கும் என்றும் ஆராய்ந்து எதிர்பார்த்து அவ்வாறு அதை வெளிப்படுத்தி !! யாரிடம் எண்ண பொய் ?? எப்போது ?? எந்த சூழலில் சொன்னோம் என்றும் நினைவில் நிறுத்தி !! அந்த எண்ணத்திலேயே சிக்கி தவிக்கும் ஓர் மாயா வலை ஆகும் ..

அதே

உண்மை என்பது !! இதுதானே நடந்து என்ற எண்ணத்தின் தீர்க்கத்தில் வரும் வெளிப்பாடு !! அதை யார் எப்போது கேட்டாலும் !! அதையே உறுதிபட சொல்லும் எண்ணத்தில் பிசுறு இல்லாத தீர்க்கமும் !! அந்த எண்ணத்திலேயே சிக்காத விடுதலை உணர்வையும் தந்து !! அடுத்து நடப்பதில் பூரண கவனத்தை எண்ண சிதைவு இன்றி எதிர்கொள்ள வைக்கும் தானே ..

இதற்கும் இறைவழிபாட்ற்கும் என்ன தொடர்பு ..

எண்ணத்தில் தீர்க்கம் !! எண்ணச்சிதைவு அற்ற தன்மை !! எண்ணத்தின் ஆழம் !! அந்த எண்ணத்தை எண்ண அலைகளாக வெளிப்பட செய்து !! அது இறையாற்றல் என்ற அருளற்றலோடு கலந்து !! எண்ணியதை எண்ணியவாறே ஈர்த்து அருளும் தன்மையை அவ்வெண்ணம் பெறும் ..

ஆதலால் தான் ..
உண்மையை சொல் !!
மெய் உணர !!

நீயே பொய் என்ற சலனத்தில் !! யார் இந்த பொய்யை ?? எப்போது கண்டுபிடித்து விடுவாரோ ?? என்ற தன்மையோடு எண்ணத்திலும் தீர்க்கம் இல்லாதே !! எப்போது அது பொய் என்று வெளிப்பட்டு விடுமோ ?? என்றும் எதிலும் ஓர் நிலையில்லா தன்மையோடு அவ்வெண்ணம் வெளிப்படும் போது, அதன் தாக்கத்தை சொல்லித்தான் புரியவைக்க வேண்டும் என்று அவசியமே இல்லை ..

யாருக்கு உண்மையாக இருக்கிறீர்களோ இல்லையோ ??

இறையிடம்
” நான் என் சுயநலத்த்திற்காக !! பொய் பேசி !! பித்தலாட்டம் புரிகின்றேன் !! இருந்தாலும் என் எண்ணத்தை நிறைவேறி அருள்க !! ” உண்மையை சொல்லி விடுங்கள் ..

இப்படி சொல்ல சொல்ல !!
” பொய் பேசி !! பித்தலாட்டம் செய்து !! நடித்து !! என்ன சாதித்தோம் ?? என்ற மெய்ஞானம் பிறக்கும் !! எப்படியும் எனக்கானதை !! எனக்கு ஏற்றபடியே அருளும் இறை இருக்க !! அதை இப்படி உண்மையை மறைத்து தான் பெறவேண்டுமா ?? ஏன் நேர்மையாகவே உண்மையை சொன்னால் தான் என்ன ?? ” என்ற தீர்க்கம் பிறக்கும் !!

நமக்கும் நேர்மையான ஓர் உள்ளுணர்வு !! சரியாய் இருக்கின்றோம் என்ற நிறைவு !! மனதில், எண்ணத்தில் தற்காலிக இன்ப / துன்ப உணர்வில் இருந்து விடுவிக்கப்பட்ட ஆனந்தம் எதிலும் நம்முள்ளே கிடைக்கும் தானே !! அந்த ஆனந்தம் தரும் தெம்பும் உற்சாகமும் உங்களுக்கு தரும் ஆத்மார்த்தமான பேரமைதி உணர்வுக்கு ஈடு இவ்வுலகில் ஏதுமில்லை !!

ஏதோ சில நிகழ்வுகளில் அவ்வுணர்வை அனுபவித்து இருப்போம் !!
அதே எதிலும் அனுபவித்தால் ??

விடை உங்களிடமே ..

வாழ்த்துகள்

எதற்கும் அருளும் சிவம் ..
உங்கள் பொய் கொண்டே உங்களின் உண்மையை உங்களிடமே வெளிப்படச்செய்து ..
மெய்யாகிய தன்னுள் ஒடுக்க அருளப்பட்ட பிறவியில் தான் இப்போது வாழ்ந்துகொண்டு இருக்கின்றோம் ..

தேர்வு நடக்கின்றது
பொய் மீண்டும் மீண்டும் உண்மையை வெளிப்படுத்த வாய்ப்பான பிறவி அருளும் !!
உண்மையை விடுவித்து மீண்டும் வாரா நிலையருளும் ..

( இன்னும் பொய்யை உண்மைபோல பேசிக்கொண்டு இருக்கும் இப்பொய்யனிடம் சொல்லி , உன்னைப்போல உண்மை இருந்தும் தேடும் பொய்யர்களுக்கு சொல் என்று சொல்லும் இறையின் திருவருளே இப்பதிவு )

 

Read Previous

ஸ்ரீ ராம ஜெயம் என்று எழுதுவது ஏன்..?? அதில் என்ன சக்தி நிறைந்துள்ளது தெரியுமா..??

Read Next

செவ்வாழையில் இவ்வளவு மருத்துவ குணங்கள் இருக்கிறதா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular