ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி வழிபாட்டை மேற்கொள்ளும் பொழுது நமது வீட்டில் உள்ள பிரச்சனைகள் விலகி நமது உடல் ஆரோக்கியத்திலும் குடும்பத்திலும் மகிழ்ச்சி கூடும்..
ஒரு பௌர்ணமி நாட்களில் மண் அகல் விளக்கை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும் அதில் நல்லெண்ணெய் ஊற்றி குலதெய்வத்தை நினைத்து அந்த எண்ணெயில் ஒரு சொட்டு தேன் மூணு மிளகு இரண்டு சிட்டிகை மஞ்சத்தூளை கலந்து பஞ்சு திரி போட்டு குலதெய்வத்தை நினைத்து தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள் குலதெய்வத்திற்கு இனிமையான தேன் கலந்த மங்களகரமான மஞ்சள் கலந்த கரு மூலிகையான மிளகு சேர்த்து தீபம் ஏற்றும் போது நம்முடைய வீட்டில் தடைபட்டு வந்த மங்களகரமான காரியங்கள் கைகூடும், அதேபோல் தீபம் ஏற்றுவதனால் நம் வீட்டில் உள்ள தீய சக்திகள் விலகி நம்முடைய முன்னோர்களின் ஆசிர்வாதம் நம் வீட்டின் மீது படும், அதேபோல் நமது உடல் மற்றும் மன ஆரோக்கியம் பெருகி விரைவில் நமது வீட்டில் சுப காரிய நிகழ்வுகள் நடைபெறும்..!!




