பிரபல இயக்குநரும் நடிகருமான பார்த்திபன், தனது மகனுக்கு திருமணம் முடிந்த பிறகு தனக்கென ஒரு துணையை தேடிக்கொள்ள போவதாக தெரிவித்துள்ளார். கடந்த 2001-ம் ஆண்டு நடிகை சீதாவுடனான விவாகரத்துக்கு பிறகு தனிமையில் வாழ்ந்து வரும் அவர், தனக்கான எதிர்கால துணை ஒரு சிறந்த துணையா இருக்க வேண்டும் என தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார். பார்த்திபனின் இந்த கருத்து தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.




