மக்களே மன அழுத்தத்தில் இருந்து வெளியே வர இதை ட்ரை பண்ணுங்க..!!

 

நம் அன்றாட வாழ்வில் பலரும் பல பிரச்சினைகளை சந்தித்து அதனால் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். உடலில் ஏற்படும் நோய்கள் மட்டும்தான் நம்மை பாதிக்கும் என்று இல்லை. மனதளவால் வரும் இந்த மன அழுத்தம் போன்ற பிரச்சினைகளும் நமக்கு ஏகப்பட்ட உடல் ஆரோக்கியத்தை கெடுத்து பலவீனமான நிலையில் உண்டாக்கி நாளடைவில் அவை மோசமான நிலைக்கு கூட செல்லலாம். மன அழுத்தத்தை நீண்ட நாட்கள் ஒரு பொழுதும் தொடர விடக்கூடாது. இதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

மன அழுத்தத்தை குறைக்க ஆரோக்கியத்தை பாதுகாக்க இதையெல்லாம் செய்தாலே போதும். ஒவ்வொரு மனிதனுக்கும் மன அழுத்தம் என்பது பல பிரச்சினைகளால் வருகிறது சிலருக்கு வேலை சம்பந்தமான விஷயங்கள் வருகிறது. சிலருக்கு கணவன் மனைவிக்கு இடையே பிரச்சனை மற்றும் விவாகரத்து ஆகியவற்றால் மன அழுத்தம் வருகிறது. ஒரு சிலருக்கு வேறு சில காரணங்களாலும் இந்த மன அழுத்தம் வருகிறது. இந்த மன அழுத்ததில் இருந்து நாம் வெளியே வர எதிர்மறையான எண்ணங்களை விட்டுவிட்டு நேர்மறையான எண்ணங்களை மட்டுமே நம் மனதில் நினைக்க வேண்டும். மேலும் நம்மளை நாமே சுறுசுறுப்பாக வைத்திருப்பதன் மூலமும் இந்த மன அழுத்தத்திலிருந்து வெளியே வரலாம். மன அழுத்தம் உள்ளவர்கள் வீட்டில் இருந்து புறப்பட்டு வெளியே சென்று இயற்கையான சூழ்நிலையில் ஒரு நான்கு நாட்கள் இருந்து தொலைபேசியில் இல்லை மனிதர்களிடம் எந்த ஒரு காண்டாக்ட் இல்லாமல் இயற்கையுடன் இருந்து அதை ரசித்து வாழ்வதில் மூலமும் மன அழுத்தத்தை குறைத்து இந்த மன அழுத்தத்திலிருந்து வெளியே வரலாம். மேலும் வீட்டில் உள்ள குழந்தைகளை வெளியே சென்று நாம் அவர்களுடன் விளையாடும்போதும் என்ன மன அழுத்தத்திலிருந்து வெளியே வரலாம். இந்த மன அழுத்ததில் இருந்து வெளியே வர எழுதும் பழக்கத்தை அதிகமாக ஆக்கிக் கொள்ளுங்கள். இவ்வாறு ஆக்கிக் கொண்டால் உங்களுடைய எண்ணங்கள் எழுத்து வடிவில் இருக்கும். இதனால் மன அமைதி பெரும் மனம் தெளிவு கிடைக்கும். மேலும், தினமும் தியானம் செய்வதன் மூலமும் மன அமைதியை பெறலாம்.

Read Previous

காலையில் எழுந்தவுடன் வெதுவெதுப்பான நீரை குடிப்பதன் மூலம் உடலுக்கு இவ்வளவு நன்மைகளா..?

Read Next

நீரிழிவு நோயாளிகள் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய பழங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular