மஞ்சளின் மருத்துவ குணம்:
மஞ்சளில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி நம்மில் பலருக்கும் தெரியும். ஆனால் ஒரு சிலருக்கு இது என்னென்ன விதமான நன்மைகளையும் மருத்துவ குணங்களையும் கொண்டது என்பது தெரியாது அதை பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம். நம் முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்து மஞ்சளில் உள்ள மருத்துவம் பற்றி நம் முன்னோர்கள் நம்மிடம் கூறியுள்ளனர். இந்நிலையில்,
வயிற்றுப் புண்ணை மஞ்சள் ஆற்றும். உடலின் எந்த இடத்தில் கட்டி இருந்தாலும், அதன் மீது மஞ்சள் பூசி, ஒரு இரவு ஊறினால், கட்டி பழுத்து, சீழ் வெளியேறி விடும். ரத்தத்தைச் சுத்தப்படுத்தும் குணமும் மஞ்சளுக்கு உண்டு. உடலுக்கு நிறத்தைக் கூட்டும் தன்மை கொண்டது. மிகச் சிறந்த கிருமி நாசினியாக விளங்குகிறது.மஞ்சளை தீயில் சுட்டு, அதன் புகையைச் சுவாசித்தால், மூக்கடைப்பு விலகி, சளி நீங்கும்.




