தமிழகத்தில் பெண்கள் தாலியை ஏன் மஞ்சள் கயிற்றில் அணிய வேண்டும்? இந்தப் பழக்கம் ஏன் வழக்கமானது? என்பது தெரியுமா?
ஒவ்வொரு இடத்தின் தட்பவெப்ப நிலையை பொறுத்தே பழக்க வழக்கங்கள் அமைகின்றன.
மஞ்சள் தாலிக்கயிறு அணிந்து குளிக்கும்போது தினமும் தாலியில் மஞ்சளைப் பூசுகின்றனர்.
மஞ்சள் என்பது ஒரு மிகச்சிறந்த கிருமி நாசினி.
முன்பெல்லாம் மணமான பெண் அடுத்த மூன்று மாதங்களில் ஒரு கருவை சுமக்க தயாராகிறாள்.
அப்போது அப்பெண் பல்வேறு நோய் தொற்றுகளுக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது.
கிருமி நாசினியான மஞ்சள் தாயையும் அவள் வயிற்றில் வளரும் சேயையும் நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கிறது.
திருமணத்தில் திருமாங்கல்யம் அணிவிக்கும் போது மாங்கல்ய தந்துனானேன என்று மந்திரம் சொல்லுவார்கள்.
தந்து என்றால் கயிறு.
மஞ்சள் கயிறு தான் தந்து என குறிப்பிடப்படுகிறது.
மஞ்சள் சரடில் தாலி இருந்தால் தான் மங்களம்.
“மாங்கல்யம் தந்துநாநேந மம ஜீவனஹேதுநா கண்டே பத்தாமி ஸூபகே ஸஞ்ஜிவசரதசதம்”
‘ஓம்! பாக்கியவதியே’ யான் சீரஞ்சீவியாக இருப்பதற்கு காரணமாக மாங்கல்யத்தை உன் கழுத்தில் கட்டுகிறேன்.
நீயும் நூறாண்டு வாழ்வாயாக என்று அர்த்தம்.




