மது அருந்துபவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய பதிவு..!!

மதுவின் போதையில் தினம் தோறும் மயங்கும் மன்னவனே….

உன் மாதுவின்….. ஆசையை கேளாயோ…. ஒரு முறையேனும்…..

நீ தினமும் காலி செய்யும் கோப்பை தான்…. உன்னை ஒரு நாள் காலி செய்யும்…..

குடித்த சில நொடியில்…. மதி இழக்கும் மன்னவனே…..

மனையாளின்…தேவை…. மறவாதே ஒரு போதும்….

அல்லும் பகல் நீ குடிக்க… அல்லல் படும் உன் குடும்பம்….

பிள்ளை செல்வம் காணாது…. பொருள் செல்வம் அழிப்பாயோ?

கொண்ட இன்பம் தொலைத்து விட்டு…. கண்ட இன்பத்தில் திளைப்பாயோ?

மழலை மொழி கேளாது ….மதுவில் உன்னை தொலைத்து விட்டு…..

மனையின் நலன் கெடுக்கும் இந்த…. மதுவை நீயும் விட்டு விட்டால்…

உன்னை ஒரு போதும் விட மாட்டாள்…. உன் தர்ம பத்தினி நடு தெருவில்….

சீர் கெட்டு நீயும் போனால்….. ஊர் கொட்டும் …..
உன் தலையில்….

தலைவனாய்….நீ மாறி….. சீர் தூக்கு…. அடுத்த தலைமுறையை….

காலம் இன்னும் காத்திருக்கு…. நீ மனம் மாறு
உனக்காக குடும்பம் இருக்கு….

Read Previous

முடவாட்டுகால் சூப் தினம் ஒரு கப் குடித்தால் மூட்டு வலி பறந்தே போகும்..!!

Read Next

மாமனார் இல்லாத புகுந்த வீடு எப்படி இருக்கும் தெரியுமா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular