மத்திய அரசின் (NBCC) நிறுவனத்தின் மருத்துவமனை சேவைகள் ஆலோசனைக் கழகத்தில் (HSCC) பல்வேறு பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பொறியியல் மற்றும் எம்பிஏ படித்தவர்கள் https://www.hsccltd.co.in/career.html என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் செப்டம்பர் 13 முதல் செப்டம்பர் 29 வரை ஆன்லைனில் பெறப்படுகிறது. தேர்வு முறை விண்ணப்பங்களின் எண்ணிக்கையைப் பொறுத்து நேர்காணல் அல்லது எழுத்துத் தேர்வு மூலம் நடைபெறும்.




