மத்திய அரசு நிறுவனமான மேற்கு மத்திய இரயில்வேயில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அப்ரண்டிஸ் பயிற்சி பணிக்காக மொத்தம் 2865 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இது Apprentice Act, 1961ன் கீழ் நடைபெறும் பயிற்சியாகும். ஜபல்பூர், பீனா, கோட்டா போன்ற பல பிரிவுகளில் வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது.
இக்காலிப்பணியிடங்களில், பிளாக்ஸ்மித், கணினி ஆபரேட்டர் மற்றும் புரோகிராமிங் அசிஸ்டன்ட், எலக்ட்ரீஷியன், எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக், ஃபிட்டர், மெக்கானிக், பிளம்பர், டர்னர், வெல்டர், வயர்மேன் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் அப்ரண்டிஸ் பயிற்சி செய்ய வாய்ப்பு உள்ளது.
விண்ணப்பதாரர்கள் முறைப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதோடு, NCVT அல்லது SCVT வழங்கும் சம்பந்தப்பட்ட டிரேட் சான்றிதழ் (ITI) பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு 15 முதல் 24 ஆண்டுகள் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 20, 2025 தேதியை அடிப்படையாகக் கொண்டு வயது கணக்கிடப்படும். அரசாணைப்படி, வகுப்புவழி அடிப்படையில் வயது சலுகை அளிக்கப்படும்.
தேர்ச்சி செயல்முறை, 10ம் வகுப்பிலும் ITI/டிரேட் சான்றிதழிலும் பெற்ற மதிப்பெண்களின் சராசரியை அடிப்படையாகக் கொண்டு மெரிட் லிஸ்ட் உருவாக்கப்படும். எந்தவிதமான எழுத்துத் தேர்வோ, நேர்முகத் தேர்வோ நடைபெறாது. எனவே, விருப்பமுள்ளவர்கள் தங்களது சான்றிதழ்களை சரியாக பதிவேற்றம் செய்து, செப்டம்பர் 29, 2025 க்குள் ஆன்லைனில் http://www.wcr.indianrailways.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவு, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் இ.அ.வ. பிரிவினருக்கான கட்டணம் ரூ.141. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்கு ரூ.41 மட்டுமே கட்டணம் விதிக்கப்படுகிறது. முழுமையான தகவல்களுக்காக, விண்ணப்பதாரர்கள் இந்த இணையதளத்தில் (https://wcr.indianrailways.gov.in/uploads/files/1755692921947-Act%20Apprentices%20notification%202025-26%20English.pdf) பார்க்கலாம்.




