மனப்பக்குவம் 🌹🌹🌹
1. பக்குவம் என்பது ‘அடுத்தவர்களை மாற்றுவதற்குப் பதில் நம்மை நாமே மாற்றிக்கொள்ள வேண்டும்’ என உணர்வது.
2. பக்குவம் என்பது ‘சக மனிதர்கள் எப்படி இருக்கிறார்களோ அப்படியே எந்தக் குறையும் சொல்லாமல் அவர்களை ஏற்றுக்கொள்வது.’
3. பக்குவம் என்பது ‘அனைவரும் அவரவர் பார்வையில் தங்களை சரியானவர்கள் என்று நினைத்து ‘ புரிந்துகொள்வது.
4. பக்குவம் என்பது ‘எதையும் கடந்து போகக் கற்றுக்கொள்வது’.
5. பக்குவம் என்பது ‘மனிதர்களிடம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உறவாகுவதும், எதிர்பார்ப்புகளே இல்லாமல் அன்பு செய்வதும்’.
6. பக்குவம் என்பது ‘நம் செயல்கள் அனைத்தும் நம் திருப்திக்காக மட்டுமே’ என புரிந்துகொள்வது.
7. பக்குவம் என்பது ‘நான் பெரிய அறிவாளி’ என்பதை உலகுக்கு நிரூபிக்க முயல்வதை நிறுத்துவது.
8. பக்குவம் என்பது ‘நம்மை மற்றவர்களோடு ஒப்பிடுவதை நிறுத்திக்கொள்வது’.
9. பக்குவம் என்பது ‘உங்களுக்குள் நீங்கள் நிதானமாக இருப்பது’.
10. பக்குவம் என்பது ‘தேவைகளுக்கும் ஆசைகளுக்கும் உள்ள வேறுபாட்டைப் புரிந்து கொள்வதும் ஆசைகளை முற்றிலும் தவிர்ப்பதும்,
இறுதியானதும், உறுதியானதும்.
11. பக்குவம் என்பது பகட்டு வாழ்க்கையையும் மகிழ்ச்சியையும் ஒன்றாக இணைத்துப் பார்ப்பதை நிறுத்தும்போதுதான் நாம் மனப்பக்குவம் அடைகிறோம்.
12. பக்குவம் என்பது நாம் செய்தது தவறு என்று புரிந்தவுடன் உடனே வயதில் சிறுவயதாக இருந்தாலும் மன்னிக்க சொல்லி கேட்பது.
13. பக்குவம் என்பது தவறு என்று தெரிந்தவுடன் அந்த தவறை மீண்டும் மீண்டும் செய்யாமல் இருப்பது.
அனைவருக்கும் பக்குவமான வாழ்க்கை அமைய வாழ்த்துகள்……




