உத்தரப் பிரதேசம்: சுனில் – லட்சுமி தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இன்ஸ்டாகிராமில் கணக்கு தொடங்கிய லட்சுமி இளைஞர் ஒருவருடன் சேர்ந்து வீடியோக்களை பதிவிட்டு வந்தார். இதனால் தம்பதி இடையே சண்டை ஏற்பட்டது. இதனிடையில் நேற்று முன்தினம் (ஆக.31) லட்சுமி மாயமானார். அவரின் குடும்பத்திற்கு எதிரான செயல்களால் அவமானமடைந்த சுனில் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து போலீஸ் விசாரிக்கிறது.




