மனைவியை கண்மணி போல காப்பவனுக்கு சமர்ப்பணம்..!! படித்ததில் பிடித்தது..!!
ஒரு பெண் தந்தையின் நிழலில் பிறகு கட்டுபவன் நிழலில் பிறகு பிள்ளைகள் நிழலில் வாழ்கிறாள். பெண் என்பவள் பாதுகாக்க பட வேண்டியவள் என இந்த சமூகம் உணர்ந்தது. ஆண் பிள்ளையை விட பெண் பிள்ளைகளுக்கு பாசம் கிடைக்கும் ஏனென்றால் அவள் இன்னொரு வீட்டிற்கு போய்விடுவாள் என.
உண்மை பெண்கள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் அதையும் தாண்டி நீங்கள் பாசம் வைக்க வேண்டியவள். வரவு பார்த்து திருமணம் செய்யும் ஒவ்வொரு ஆணும் இன்று வாய்தாவுக்கு காத்திருக்கிறான். பெண்ணை பாட சொல்லி வீணை மீட்ட சொல்லி கேட்டது ஒரு காலம் . இவனின் பேங்க் பேலன்ஸ் எவ்வளவு என எடை போட்டு வாங்குவது இக்காலம்.
செல்வம் என்பது 16 அதில் பணம் மட்டுமே செல்வமாக்கி செல்லா காசாகினாய். ஒவ்வொரு பெண்ணும் பிறந்த இடத்திலிருந்து வெளியே வரும் போது வேதனையை மறைத்து உன் சாதனைக்கு வித்தாகிறாள். விற்றது ஆடு மாடா . கொடுத்தது உயிருள்ள ஜீவன். மனைவியை நேசியுங்கள் வாழ்வு புனிதமாகும்.
மனைவியை கண்மணி போல காப்பவனுக்கு சமர்ப்பணம்.




