மரியாதை தரும் காதல் என்றும் தோற்காது என்பதற்கு இந்த பதிவு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு..!!!

மரியாதை தரும் காதல் என்றும் தோற்காது.❤️

இன்னும் சொல்லப்போனால் மரியாதையில் மலரும் நம்பிக்கையும் , நம்பிக்கையில் மலரும் சுதந்திரமும்தான் இந்த காதல்.

நம்பிக்கையானவரின் அவ மரியாதையால் அவமானம் ஏற்பட்டு, மனக் கசப்பு ஒரு தடவை வந்துவிட்டால் அவ்வளவு சீக்கிரம் அது நம்மைவிட்டுப் போகாது.

நம்முடைய பலவீனமான நேரங்களில் எல்லாம் ஒரு attendance போட்டுட்டு நம்மை மேலும் பலவீனமாக்கிப் போகும். அதற்குப்பிறகு இனிப்பாக எவ்வளவு தான் மருந்தென தடவினாலும் அடிநாக்கில் கசப்பு இருந்துக்கொண்டே இருக்கும்.

எதை இழந்தாலும் மனம் விரைவாக மீண்டெழும், ஆனால் நம்பிக்கை உடையவர்கள் நம்மை உதாசீனப்படுத்தும்போது
இனி வாழ என்ன இருக்கிறது என்ற விரக்தியின் உச்சத்திற்கே நம்மை கொண்டு போய்விடும்.

இவர்தான் நம் வாழ்க்கை என்று நம்பி வாழும்போது
அவரும் நம்மைப் புரிந்து கொள்ளாமல்

நம்மை அரவணைக்காமல்

யார் முன்னாடி அசிங்கப்படக்கூடாது என்று நினைக்குறமோ அவங்க முன்னாடியே நம்மை அசிங்கப்படுத்தும்போது,

நமக்காக எதுவும் செய்வார் என்று நினைத்த நம்முடைய உறவு, கொஞ்சம் கூட நம்மை நினைக்காமல் சுயநலமாக தன்மீது மட்டுமே அக்கறை கொண்டு, அதிகாரத்தின் வழியே நம்மை கட்டுப்படுத்த முயலும்போது

நம் பாசத்தை நமது பலவீனமாக எடுத்துக் கொண்டு தேவைக்கு நம்மைப் பயன்படுத்தும் போது

மனதின் ஆணி வேர் நஞ்சால் உறுதி இழக்கிறது.

அந்த மாதிரி நேரத்தில், வாழ்க்கையின் மீது பிடிப்பற்று எதைப்பற்றியும் கவலை இல்லாமல் இஷ்டம் போல வாழத் தோணும்.

மரியாதை இழந்த இடத்தில் நம்பிக்கை இல்லாமல் போகும்.
நம்பிக்கை இல்லாது போன இடத்தில் அன்பும் காதலும் பட்டுபோகும்.

காதல் இல்லாத வாழ்க்கை வாழ்க்கையே அல்ல. அது வெறுமை.

நம்மைச் சுற்றி எவ்வளவு மனிதர்கள் இருந்தாலும்
வீடு, சொத்து என்று எது இருந்தாலும்
நமக்கு பிடித்த நபரின் காதல் நம் மீது இல்லாதபோது
நிம்மதி இல்லாமல் போகும்.

நிம்மதியற்ற வாழ்க்கை என்பது, தான் ஆசைப்பட்டதில் குறைந்த பட்சம்கூட கிடைக்காமல் போகும் வறண்ட வாழ்க்கை தான்.

யாராக இருந்தாலும் மரியாதையோடு நடத்தினால் நம்பிக்கை வளர்ந்து கொண்டே போகும்.

நம்பிக்கை இருக்கும் இடத்தில் சுதந்திரம் இருக்கும்.

சுதந்திரம் இருக்கும் இடத்தில் காதல் மழை பெய்யும்.!

அது தானே நாம் தேடும் நிம்மதி…காதலே நிம்மதி..❤️

Read Previous

ஒரே ஒரு பலாப்பழம் வாழ்க்கையின் பல படிமங்களை சொல்லித் தருகிறது..!!!

Read Next

மனைவி என்பவள் யார்..?? அனைத்து கணவன்மார்களும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான பதிவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular