மார்பு வலி குறைய அகத்திக் கீரையை எடுத்து வெயிலில் காயவைத்து இடித்து சாலித்து ஒரு சீசாவில் பத்திரப்படுத்தி கொள்ளவேண்டும். அந்த பொடியை ஆறு கிராம் எடுத்து வெந்நீரில் கலந்து காலை, மாலை என இருவேளை வீதம் ஏழு நாட்கள் சாப்பிட்டு வந்தால் மார்பு வலி குறையும்.
சிறிது எலுமிச்சை சாரை சுடு நீரில் விட்டு நன்கு கலக்கி பின்தேன் சிறிது சேர்த்து கலக்கி குடித்தால் நெஞ்சு சளி கரையும். தினமும் காபி, டீ க்கு மாற்றாக இந்த பானம் குடிக்க பழகி கொண்டால் நெஞ்சு சளியே இருந்த இடம் தெரியாமல் போகும்.
ஆரஞ்சு பழத்தை உரித்ததும், அதன் தோலை உடனே முகத்தில் தேய்த்து, 5 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவினால், முகமானது குழந்தையின் முகத்தைப் போன்று பொலிவோடு அழகாகும். இதனை தினமும் செய்தால், சருமம் சூப்பராக இருக்கும்.
மிளகுடன் வெல்லம் சேர்த்து காலையும் மாலையும் சாப்பிட்டு வந்தால் தலைவலி, தலைபாரம் குணமாகும். மிளகை அரைத்து அதனை தலையில் பற்று போட்டால் தலைவலி குணமாகும். மிளகை சுட்டு அதன் புகையினை இழுத்தால் தலைவலி தீரும்.
2-3 துளிகள் கிராம்பு எண்ணெயை 1/4 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெயுடன் கலந்து, காட்டனில் அந்த எண்ணெயை தொட்டு, இரவில் படுக்கும் போது அந்த காட்டானை சொத்தைப் பல் உள்ள இடத்தில் வைத்து தூங்க வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், சொத்தைப் பற்கள் விரைவில் குணமாகும்.




