மருத்துவ படிப்பை கைவிட்டால் 10 லட்சம் அபராதம்…!!

உலகம் முழுவதும் மருத்துவ கல்விக்காக பலரும் போட்டி தேர்வில் கலந்து கொண்டு போராடுகின்றனர், அந்த நிலையில் மருத்துவ படிப்புக்கான நுழைவு சீட்டு கிடைத்தவுடன் சேர்ந்து படிப்பதற்காக முன் வருகின்றனர், சில மாணவர்கள் பலமுறை தகுதி தேர்வில் முயற்சித்தும் தோல்வியடைந்து தற்கொலை செய்து கொள்வது நாட்டில் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது, இதனால் மருத்துவ படிப்பை சில நாட்களுக்கு பிறகு மருத்துவ கல்வியை விட்டு விலகுவதாக நினைத்து மாணவர்கள் பாதியிலேயே மருத்துவ படிப்பை விட்டு வெளியேறுகின்றனர், இதனால் மருத்துவ படிப்பை பாதியில் விடுபவர்களுக்கு மருத்துவத்துறை ரூபாய் 10 லட்சம் அபராதம் விதித்துள்ளது..

மருத்துவ படிப்பை பாதியில் கைவிட்டால் ரூபாய் பத்து லட்சம் அபராதம் விதிக்கப்படும் என மருத்துவ கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது, மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்கில் இடம் பெற்றவர்கள் வரும் 26 ஆம் தேதிக்குள் கல்லூரியில் சேர வேண்டும் என மருத்துவத்துறை அறிவித்துள்ள நிலையில் விருப்பமில்லாதோ குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கல்லூரியில் சேர்ந்தாலும் அபராதம் இன்றி வெளியேறலாம், அனுமதிக்கப்பட்ட தேதிக்குப்பின் படிப்பை கைவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று மருத்துவ இயக்குநரகம் தெரிவித்துள்ளது..!!

Read Previous

தீபாவளி சிறப்பு ரயில்கள் மிக விரைவில் அறிவிக்கப்படும்..!!

Read Next

பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular