திரை துறையில் பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார், அவர் காலமான தை அறிந்து பிரபலங்கள் பலரும் நேரில் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர் மேலும் சமூக வலைதள பக்கங்களில் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்..
பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா 85 வயது கொண்டவர் பெங்களூரில் நேற்று மாரடைப்பால் காலமானார், சேலத்தை சேர்ந்த அவர் நடன கலைஞராக அறிமுகமாகி கதாநாயகியாக உயர்ந்தவர் இவர் எம்ஜிஆர் சிவாஜி கணேசன் என முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார், மேலும் 1998க்கு பிறகு சினிமாவிலிருந்து ஒதுங்கினார் 600 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வந்தார், இவர் தமிழ் தெலுங்கு கன்னடம் மற்றும் மலையாள படங்களிலும் நடித்து வந்துள்ளார், சிஐடி சகுந்தலாவின் புகழ் பெற்ற படமான தவப்புதல்வன் படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இந்த படம் அவருக்கு சிறந்த வெற்றியும் பெயரையும் வாங்கி தந்துள்ளது அவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்..!!



