மலச்சிக்கலைப் போக்க எலுமிச்சை நீரில் இந்த ‘ஒரு பொருளை’ சேர்த்தால் போதும்..!!

Oplus_131072

 

எலுமிச்சை நீருக்கு குடலுக்கு ஹைட்ரேஷன் அளிக்கும் மற்றும் சிட்ரிக் ஆசிட்டை வெளியிடும் திறன் உள்ளது, இது செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது.

காலை நேரத்தில் மலச்சிக்கலால் ஆவதிப்படுவது ஒருவரின் மனநிலையை கெடுக்கும் முக்கியப் பிரச்சனைகளில் ஒன்றாகும். மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் பெறுவதற்காக சிலர் எலுமிச்சை நீர் அருந்தினாலும், அதனுடன் ஒரு குறிப்பிட்ட பொருளைச் சேர்ப்பது நிவாரண செயல்முறையை விரைவுபடுத்துவதோடு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் என்பது பலருக்கும் தெரியாத ஒருவிஷயமாக இருக்கிறது.

எலுமிச்சை நீருக்கு குடலுக்கு ஹைட்ரேஷன் அளிக்கும் மற்றும் சிட்ரிக் ஆசிட்டை வெளியிடும் திறன் உள்ளது, இது செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. எனவே நீங்கள் பருகும் எலுமிச்சை நீரில் ஒரே ஒரு டேபிள் ஸ்பூன் சியா விதைகளை சேர்த்து, 10 நிமிடங்கள் ஊற வைப்பது கூடுதல் ஆரோக்கிய நன்மைகளை வழங்கும்.பொதுவாக பரபரப்பான வாழ்க்கை கொண்டவர்கள் சாப்பிடும் காரமான உணவுகளும், அவர்களின் ஒழுங்கற்ற வாழ்க்கை முறையும் அவர்களின் குடல் இயக்கத்தைச் மந்தமாக்க கூடும். இந்த சூழலில் எலுமிச்சை நீரில் சியா விதைகளை சேர்த்து பருகுவதன் மூலம் குடல் மற்றும் ஆரோக்கியத்திற்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இங்கே பார்க்கலாம்.

சியா விதைகளுடன் சேர்த்து எலுமிச்சை நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்:- சியா விதைகளில் கரையக்கூடிய நார்ச்சத்து (soluble fibre) நிறைந்துள்ளது, எனவே இதனை ஊற வைக்கும் போது ஒரு கூழ் போன்ற பொருளாக மாறுகிறது. ஃபுட் சயின்ஸ் அன்ட் நியூட்ரிஷன் நடத்திய ஒரு ஆய்வின்படி, இந்த கூழ் செரிமான மண்டலத்தைச் சுத்தம் செய்து, காலை நேர மலச்சிக்கலுக்கு நிவாரணம் அளிக்கிறது மற்றும் செரிமான மண்டலத்தைச் சுத்தம் செய்வதன் மூலம் மலச்சிக்கல் ஏற்படுவதை தடுக்கிறது.

சியா விதைகளில் உள்ள ஒமேகா-3 ALA (ஆல்பா-லினோலெனிக் அமிலம்), எலுமிச்சை நீருடன் சேரும் போது, ​​ட்ரைகிளிசரைட்ஸ், எல்டிஎல் கொலஸ்ட்ரால் மற்றும் அழற்சியைக் குறைக்க உதவுவதுடன், நல்ல கொலஸ்ட்ரால் என குறிப்பிடப்படும் HDL அளவை அதிகரிக்கிறது. இந்த அற்புதமான இரட்டைக் கலவை, லிப்பிட் அளவுகளை மேம்படுத்துவதன் மூலம், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், இதய நோய்கள் ஏற்படுவதற்கான அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது.

சியா விதைகளில் காணப்படும் நார்ச்சத்து, எலுமிச்சை நீருடன் சேரும் போது, ​​கார்போஹைட்ரேட்களின் உறிஞ்சுதலை மெதுவாக்குகிறது. இது குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்தி, இன்சுலின் சென்சிடிவிட்டியை அதிகரிக்கிறது. இந்த பானம் ரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்தவும், டைப் 2 நீரிழிவு அல்லது இன்சுலின் ரெசிஸ்டென்ஸை திறம்பட நிர்வகிக்கவும் மிகவும் ஏற்றது.

எலுமிச்சை நீரில் சியா விதைகளை சேர்த்து பருகுவது என்பது அதிலிருக்கும் அதிக நார்ச்சத்து காரணமாக தேவையற்ற பசியை அடக்குகிறது மற்றும் குறைக்கிறது. எடை இழப்புக்கு தேவையான ஹைட்ரேஷனை வழங்குகிறது.

இந்த பானத்தில் வைட்டமின் சி, லாவனாய்ட்ஸ் மற்றும் வலுவான ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் இருப்பது ஃப்ரீ ரேடிக்கல்ஸ் மற்றும் ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரஸ்ஸை எதிர்த்துப் போராட உதவுகிறது. சியா விதைகள் கலந்த எலுமிச்சை நீரைக் குடிப்பதன் மூலம், செல்களை தீங்குகளிலிருந்து பாதுகாக்கவும், நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும், உற்சாகமாகவும் இருப்பதாக உணர முடியும்.

மொத்தத்தில் எலுமிச்சை நீரில் சியா விதைகளைச் சேர்ப்பது, உங்கள் எளிய பானத்தை மலச்சிக்கலுக்கான ஒரு வீட்டு மருந்தாக மாற்றும். இதைத் தொடர்ந்து பயன்படுத்தி வருவதன் மூலம், நீங்கள் மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் பெறுவது மட்டுமல்லாமல், உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தி கொள்ளலாம்.

Read Previous

ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க இந்த உணவுகளை சாப்பிட வேண்டும்..!!

Read Next

வெந்நீரில் கால் வைப்பதால் இத்தனை நன்மைகளா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular