Oplus_131072
வாய்ப்புண்கள், தொண்டை வலி போன்றவை இருந்தால், மாசிக்காயை பொடி செய்து, வெந்நீரில் போட்டு மூடிவைத்துவிட வேண்டும். 10 நிமிடம் கழித்து, அந்த நீரை மட்டும் வடிகட்டி வாய் கொப்பளித்து வந்தால் மேற்கண்ட கோளாறுகள் சரியாகும். தொற்றுகள், கிருமிகள் இருந்தாலும் நீங்கிவிடும்..
கட்டிகள், புண்கள், ரணங்கள் இருந்தால், மாசிக்காயை அரைத்து தடவலாம்..
சர்க்கரை நோயாளிகளுக்கு புண்கள் வந்தால் உடனே ஆறிவிடாது. அந்த புண்களை ஆற்றக்கூடியதாக இந்த மாசிக்காய் திகழ்கிறது..
ஆசனவாய் வெடிப்புகள், மூலநோய் எரிச்சல் இருந்தால், மாசிக்காயை நீரில் குழைத்து, வெடிப்புள்ள பகுதியில் தடவி வரலாம்.
பச்சிளம் குழந்தைகளுக்கு உரைமருந்தாக பயன்படுத்தப்படும் இந்த மாசிக்காய், நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடியது..
குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், மாசிக்காயை தூளாக்கி, தேனில் 1 தேக்கரண்டி கலந்து தருவார்கள். அல்லது மாசிக்காயை தாய்ப்பால் விட்டு இழைத்தும் குழந்தையின் நாவில் தடவுவார்கள். ,
குழந்தைகளின் நாக்கில் மாவு போல வெள்ளை நிறத்தில் படிந்திருப்பதை அகற்றவும் இது உதவுகிறது.
கால் இடுக்குகளில் சேற்றுபுண்களுக்கும், மாசிக்காயை நீரில் குழைத்து தடவி வரலாம்..
மாசிக்காய் பட்டைகளில் கஷாயம் வைத்து குடித்தால், இருமல், சளி கட்டுப்படும்..
பெண்களுக்கு மாதவிடாய் சமயத்தில் அதிக இரத்தப்போக்கு இருந்தால், இந்த மாசிக்காயை பொடி செய்து, ஒருநாளைக்கு 3 முறை சாப்பிட்டால், இரத்தப்போக்கு கட்டுக்குள் வரும்.
வெள்ளைப்படுதல் பிரச்சனை இருந்தால் மாசிக்காய் பொடியைத் தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்து குடித்து வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும். அல்லது மாசிக்காய் பொடியை பசும்பால், அல்லது மோரில் கலந்தும் குடிக்கலாம்.
மாசிக்காய் பட்டையை சிறுநீரில் இரத்தம் போகுதல், ஈறுகளிலிருந்து இரத்தம் வடிதல் போன்ற பிரச்சனைகளுக்கும் பயன்படுத்தலாம்.
மாசிக்காய், ஜாதிக்காய் மற்றும் கிராம்பைத் தூளாக்கி, இந்தக் கலவையை முகத்தில் தடவி, சற்றுநேரம் கழித்து முகத்தை கழுவிவர, முகத்தின் பொலிவு கூடும்
குடல் புண் உள்ளவர்கள், மாசிக்காய்ப்பொடி ஒரு கிராம் அளவு எடுத்து நாட்டுக்கோழி முட்டையின் மஞ்சள் கருவில் மசித்து சாப்பிட்டால், நீண்ட நாட்கள் குடற்புண் பிரச்சினைகள் குணமாகும். ,
மாசிக்காயை லேசாக வறுத்து பொடியாக்கி ஒரு கிராம் அளவு எடுத்து தேனில் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால், உடல் வலிமை பெறும்.




