தெலங்கானா: மவுலி (19) என்ற மாணவி கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார். அவர் படிக்கும் கல்லூரியில் கைப்பந்து விளையாட்டு பயிற்சியாளராக அம்பாஜி என்பவர் பணியாற்றி வந்தார். அவர் மவுலியை காதலிப்பதாக கூறி தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளார். அவரின் தொடர் அத்துமீறலால் மனமுடைந்த மவுலி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து அம்பாஜியை தேடி வருகின்றனர்.




