மாநில கல்விக் கொள்கையை இன்று (ஆகஸ்ட் 08) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட உள்ளார். மாநில கல்விக் கொள்கையானது உயர்க்கல்வி, பள்ளிக்கல்வி என தனித்தனியாக பிரிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக பள்ளிக்கல்வித் துறையின் கொள்கையை முதலமைச்சர் இன்று வெளியிடுகிறார். இதில் பல முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் கூறப்படுகிறது. தேசிய கல்விக்கொள்கையை பல்வேறு மாநிலங்களில் அமல்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.




