மார்கழி மாத சிவராத்திரி விரதம்..!! என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?..
மார்கழி மாத சிவராத்திரி டிச.29 ஆம் தேதி அதிகாலை 3:03 மணிக்கு தொடங்கி டிச.30ஆம் தேதி அதிகாலை 4:01 மணிக்கு முடிவடைகிறது. அன்றைய நாள் சிவராத்திரி விரதத்தை கடைப்பிடிப்பதன் மூலமாக சிவபெருமான் மகிழ்ச்சி அடைந்து தனது பக்தர்களை ஆசீர்வதிப்பார் என நம்பப்படுகிறது. மேலும், திருமணம் தொடர்பான அனைத்து தடைகளும் நீங்கும் எனவும் விரும்பிய வாழ்க்கைத் துணை கிடைக்கப்பெறும். எனவும் கூறப்படுகிறது. திருமண வாழ்வில் மகிழ்ச்சி நிலவுவதுடன் நிதி நெருக்கடியில் இருந்தும் விடுபடலாம் எனப்படுகிறது.




