மாலை நேர சட்டப்பேரவை கூட்டம் ரத்து..!! சபாநாயகர் முக்கிய அறிவிப்பு..!!

 

மாலை நேரத்திலும் சட்டப்பேரவை கூட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், உறுப்பினர்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு ஒரே அமர்வாகவே கூட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார். மேலும், வரும் திங்கள் முதல் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பேசுவதற்கு 10 நிமிடங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை கடந்து உறுப்பினர்கள் தொடர்ந்து பேசினால், அடுத்த உறுப்பினரை பேச அழைக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும், இதற்காக உறுப்பினர்கள் கோபித்துக் கொள்ளக் கூடாது என்றும் சபாநாயகர் கேட்டுக்கொண்டுள்ளார். சட்டப்பேரவை நடவடிக்கைகள் நேரத்தை கருத்தில் கொண்டு ஒழுங்காக நடைபெறுவதற்காக இந்த நடைமுறை பின்பற்றப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Previous

பெரம்பலூரில் டீக்கடையில் கேஸ் சிலிண்டர் வெடிப்பு..!! 20-க்கும் மேற்பட்டோர் காயம்..!!

Read Next

விஜய் வீட்டருகே புதிய தலைமைச் செயலகம்?.. தீவிரமாகும் ஆய்வுப் பணிகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular