தமிழகத்தில் தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்பட்டு வருகின்ற நிலையில் கனமழை ஆங்காங்கே பெய்து வருகிறது இதனை தொடர்ந்து வரும் ஒன்பதாம் தேதி கனமழை இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது..
அரபிக் கடலில் வரும் அக்டோபர் 9ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக
ஐஎம்டி தெரிவித்துள்ளது கிழக்கு திசை காற்று தமிழகத்தில் ஊடை செல்வதால் வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்க வாய்ப்புள்ளது. மேலும் தென்காசி நெல்லை குமரியில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுவிக்கப்பட்டுள்ள, மேலும் தேனி, திண்டுக்கல், மதுரை, தஞ்சை, திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை, நாகையில் கனமழை செய்யும் என மஞ்சள் அலர்ட் விடுவிக்கப்பட்டுள்ளது, மேலும் தமிழகத்தில் தொடர்ந்து ஏழு நாட்களுக்கு கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ள நிலையில் தற்பொழுது நாமக்கல், சேலம், கரூர், திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களில் கன மழைக்கான வாய்ப்பு அதிக அளவில் உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது, மேலும் மழைக்காலங்களில் மக்கள் கவனமான முறையில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது..!!




