சென்னை முகப்பேர் பகுதியில் மல்லிகா (50) என்ற மூதாட்டி ஒருவர் வீட்டின் கதவை தட்டி வீட்டு வேலைக்கு ஆள் வேண்டுமா என கேட்டு வீட்டு உரிமையாளரிடம் பேச்சு கொடுத்துள்ளார். அப்போது திடீரென மல்லிகா வீட்டு உரிமையாளரின் முகத்தில் மிளகாய் பொடியை தூவி, அவர் அணிந்திருந்த தங்க செயினை பறிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த வீட்டு உரிமையாளர் கூச்சலிட்டதால் அக்கம் பக்கத்தினர் மல்லிகாவை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.




