மிளகு பல மருத்துவ குணங்கள் கொண்ட ஒரு மசாலாப் பொருள். இது பல்வேறு நோய்களைக் குணப்படுத்த உதவுகிறது. இருப்பினும், மிளகை அளவுக்கு அதிகமாக உட்கொள்வது சில உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். அதிகமாக சேர்த்தால் வயிற்று எரிச்சல், செரிமான கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உணவுக்குழாயில் சேதத்தை ஏற்படுத்துவதோடு, நுரையீரல் பிரச்னைக்கும் காரணமாகிவிடுமாம். எனவே, மிளகின் நன்மைகளைப் பெறும்போது, அதன் அளவிலும் கவனம் செலுத்துவது அவசியம்.




