அமமுக தலைவர் டிடிவி தினகரனை மீண்டும் என்டிஏ கூட்டணியில் இணைய வலியுறுத்தியதாக பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். சென்னையில் இன்று (செப் 23) பத்திரிகையாளர்களிடையே பேசிய அவர், ‘சமீபத்தில் டிடிவி தினகரனை சந்தித்து பேசியது குறித்து விளக்கம் அளித்தார்.மேலும், ஓபிஎஸ்-ஐயும் விரைவில் சந்திக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறினார். ரஜினிகாந்தை சந்திப்பது வழக்கமான ஒன்றுதான் என்றும், அதில் அரசியல் ஒன்றும் இல்லை என்றும் விளக்கம் அளித்தார்.




