முதுமையில் வறுமை.. அதைவிட கொடியது முதுமையில் தனிமை..!!

 

கோவையில் நண்பரின் வீட்டுக்கு அருகே பல வில்லாகளை பிரபல கட்டுமான நிறுவனம் கட்டிவருகிறது அங்கே வீடுவாங்க வேண்டும் என்றால் வருடகணக்கில் புக் செய்துவிட்டு காத்திருக்க வேண்டும்

அப்படி என்ன இருக்கிறது என்று நண்பரிடம் கேட்டபோது வீடு மட்டும் வாங்கினால்போதும் தினசரி வீடு கிளின் செய்ய துணி துவைத்துதர ஆட்கள் வருவார்கள். உடல்நிலை சரியில்லையென்றால் வீட்டுக்கே மருத்துவர்கள் வருவார்கள். முக்கியமாக சமைக்க தேவையில்லை மூன்றுவேலை உணவு.. டீ காபி சிநேக்ஸ் எல்லாம் வந்துவிடும்.. 24மணி நேரமும் செக்யூரிட்டி பாதுகாப்பு.. சுகதாரமான தண்ணீர் என எதற்கும் நீங்கள் வெளியில் செல்ல வேண்டியது இல்லை…

சூப்பர் என்றுதானே நினைக்க தோன்றுகிறது… ஆனால் அதற்கு பின் ஒரு வலி இருக்கிறது..

ஆம்….

அங்கு வசித்து வரும் நபர்களேல்லாம் தங்களது வாரிசுகளை கஸ்டபட்டு படிக்க வைத்து ஆளாக்கி வெளியூர்களிலும். வெளி மாநிலங்களிலும்.வெளிநாட்டிலும். செட்டிலாக இங்கு இவர்களை கவனிக்க இதுபோன்ற நிறுவனகளைநாடி வீடு வாங்கி தங்கவைத்து விடுகிறார்கள்..

நல்ல விசயம்தானே என கேட்க தோன்றும்.. நல்ல விசயம்தான் ஆனால்…

முதுமையில் தேவை என்னவோ இந்த வசதிகள் மட்டுமே இல்லை…

வாரிசுகளின் அன்பு பாசம் அரவனைப்பு பேரன் பேத்தி களின் குறும்புகள் இதுதான் உண்மையாக முதியவர்களுக்கு மகிழ்ச்சி இதுபோன்ற வசதிகள் இல்லை

மிகவும் கொடியது..

முதுமையில் வறுமை அதைவிட கொடியது முதுமையில் தனிமை.

Read Previous

ஆண்களுக்கும் அழுகை வரும்.. அது எப்போ என்று தெரியுமா..!! தெரியவில்லை என்றால் தெரிந்து கொள்ளுங்கள்..!!

Read Next

மீண்டும் மீண்டும் சூடேற்றி சாப்பிடக்கூடாத உணவுகள்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular