கேரளாவில் மூளையை தாக்கும் அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ் நோயால் 18 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொல்லம், கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்பு அதிகமாக உள்ளது. சுதந்திரமாக வாழும் இந்த அமீபா பெரும்பாலும் மாசுபட்ட நீர் நிலைகளில் காணப்படும். பாதிப்பு அதிகரித்து வருவதால், மாநிலம் முழுவதும் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.




