Oplus_131072
வல்லாரைக் கீரை, அஸ்வகந்தா, நாட்டுச் சர்க்கரை தலா அரை கிலோ எடுத்துப் பொடித்து, டப்பாவில் அடைத்துக்கொள்ளவும்.
தினமும் ஒரு டம்ளர் சூடான பாலில், இந்தப் பொடி ஒரு ஸ்பூன், இரண்டு வால்நட்களைப் பொடித்துச் சேர்த்துப் பருக வேண்டும்.
பலன்கள்: அனைவரும் பருகலாம். குழந்தைகளுக்குக் கொடுக்கும்போது, அவர்களின் நினைவாற்றல், அறிவுத்திறன் அதிகரிக்கும். வயதாகும்போது வரும் மறதி நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ள உதவும்.
வலிகளுக்கு மட்டும் அல்ல, எல்லா வியாதிகளுக்கும் உடலைவிட மனம்தான் பிரதான காரணம். சிந்தனையால், ரசாயன மாற்றத்தால் மட்டும் வலிகளும் உபாதைகளும் நிகழ வேண்டும் என்ற அவசியம் இல்லை. பதற்றம்கூட விபத்து ஏற்படக் காரணமாகலாம்; சில ஆபத்துகளை நோக்கிச் செல்லவைக்கலாம்; வெளியிலிருந்து வரும் கிருமியைத் தடுக்கும் சக்தியை இழக்கலாம். மன அளவிலான வியாதித் தடுப்பை ‘சைக்கோ இம்யூனிட்டி’ எனச் சொல்கின்றனர். ‘கில்லி’யிலும் ‘துப்பாக்கி’ படத்திலும், இளைய தளபதி க்ளைமாக்ஸில் கையை, காலை உதறி உயிர் பெற்று எதிரியைத் தாக்குவதும் இந்த சைக்கோ இம்யூனிட்டியால்தானோ…..




