காவிரி டெல்டா விவசாயிகளின் முக்கிய நீராதாரமாக விளங்கும் மேட்டூர் அணையில் இருந்து இன்று (செப். 1) பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. முதலமைச்சர் விஜய் அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்து, தண்ணீரில் மலர்களை தூவி விவசாயிகளுடன் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
மேட்டூர் அணையின் பாசன நீரை நம்பியுள்ள சுமார் 16 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு இதன் மூலம் பாசன வசதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு அணை பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நிகழ்ச்சியில் அமைச்சர்கள் என்.ஆனந்த், விஜய் தமிழன் பார்த்திபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.




