மோர் குழம்பு ஒருமுறை இப்படி ட்ரை பண்ணி பாருங்க..!! டேஸ்ட் அல்லும்..!!

Oplus_131072

மோர்க்குழம்பு செய்வது எப்படி…..

தேவையானவை:

சுமாராக புளித்த மோர் – 500 மில்லி, வெண்டைக்காய் – 10, கடலைப்பருப்பு, வெந்தயம் – தலா அரை டீஸ்பூன், தனியா – ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, அரிசி – ஒரு டீஸ்பூன், தேங்காய் துருவல் – ஒரு கப், எண்ணெய் – 4 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

தாளிக்க: கடுகு – அரை டீஸ்பூன், வெந்தயம் – கால் டீஸ்பூன், எண்ணெய் – அரை டீஸ்பூன்.
செய்முறை: கடலைப்பருப்பு, தனியா, காய்ந்த மிளகாய், வெந்தயம் ஆகியவற்றை எண்ணெய் விட்டு வறுத்து… தேங்காய் துருவல், அரிசி சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும். அந்த விழுதை ஒரு பாத்திரத்தில் மோருடன் கலந்து தேவையான அளவு உப்பு சேர்க்கவும். வெண்டைக்காய்களை துண்டுகளாக நறுக்கி, எண்ணெய் விட்டு பொன்னிறமாக வதக்கி, கலந்து வைத்து இருக்கும் மோருடன் சேர்க்கவும். இதை மிதமான தீயில் சுட வைத்து லேசாக கொதித்ததும் இறக்கவும். அரை டீஸ்பூன் எண்ணெயில் கடுகு, வெந்தயம் தாளித்து சேர்க்கவும்.
குறிப்பு: மோர்க்குழம்பு அதிக நேரம் கொதிக்கக் கூடாது. கத்திரிக்காய், சேப்பங்கிழங்கு, பூசணிக்காய், சௌசௌ, பருப்பு உருண்டை ஆகியவற்றைப் பயன் படுத்தியும் மோர்க்குழம்பு செய்யலாம். மோர்க் குழம்பும் பருப்பு உசிலியும் நல்ல ஜோடி.

 

Read Previous

அஜித் குமார் குறித்து பேசிய பிரபல நடிகை..!! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க..!!

Read Next

டிவி பாத்துட்டே… சாப்பிடுறீங்களா..?? இந்த பதிவு உங்களுக்கு தான்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular